உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கிரேன் மோதி காவலாளி பலி

 கிரேன் மோதி காவலாளி பலி

மறைமலை நகர்: நவ. 23--: பொத்தேரியில் கிரேன் மோதி தனியார் கல்லுாரியில் பணி புரிந்த காவலாளி உயிரிழந்தார். கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் அம்மாசி, 45. மறைமலை நகர் அடுத்த கோனாதி பகுதியில் தங்கியிருந்து பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம்., கல்லுாரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் 12:20 மணிக்கு பணியில் இருந்த போது பின்னால் வந்த கிரேன் வாகனம் அம்மாசி மீது மோதியது. இதில் அம்மாசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மறைமலை நகர் போக்குவரத்து போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ