உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தொழிற்சாலையில் காவலாளி பலி

தொழிற்சாலையில் காவலாளி பலி

மறைமலை நக:தொழிற்சாலையில் மயங்கி விழுந்த காவலாளி பலியானார். சிங்கபெருமாள் கோவில் அடுத்த சின்ன செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ரவி, 55. மறைமலை நகர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு ரவி வேலைக்கு சென்றார். நேற்று காலை காவலாளி அறையில் ரவி மயங்கிய நிலையில் இருந்ததை கண்ட சக தொழிலாளர்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாரடைப்பால் ரவி உயிரிழந்தாக தெரிவித்தனர். மறைமலை நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி