உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கழிவுநீர் கால்வாய் சிமென்ட் சிலாப் சேதம்

 கழிவுநீர் கால்வாய் சிமென்ட் சிலாப் சேதம்

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கத்தில் கழிவுநீர் கால்வாய் மீது அமைக்கப்பட்ட சிமென்ட் சிலாப் உடைந்து சேதம் அடைந்துள்ளது. அச்சிறுபாக்கத்தில், சென்னை - - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் புறவழிச் சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன. இதில், புறவழிச்சாலை ஓரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு, அதன் மீது பாதசாரிகள் நடந்து செல்ல வசதியாக சிமென்ட் சிலாப்புகள் போடப்பட்டுள்ளன. தற்போது ஆங்காங்கே உடைந்து உள்ளது. இதனால், நடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், வார சந்தை நடைபெறும் இடம், கால்நடை மருத்துவமனை, பி.டி.ஓ., அலுவலகம், அரசினர் மேல்நிலைப் பள்ளி, பைபாஸ் பேருந்து நிறுத்தம் மற்றும் அச்சிறு பாக்கம் நெடுஞ்சாலை துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய் மீது அமைக்கப் பட்ட சிமென்ட் சிலாப்புகள் உடைந்து உள்ளன. எனவே, தேசிய நெடுஞ்சாலை துறையினர், கால்வாய் மீது உடைந்து உள்ள சிமென்ட் சிலாப்புகளை அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக சிமென்ட் சிலாப்புகள் அமைக்க வேண்டும் என, பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை