மேலும் செய்திகள்
முடிவுற்ற பணிகள் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பு
22-May-2025
அச்சிறுபாக்கம்:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வனச்சரக அலுவலகத்தின் கீழ் மதுராந்தகம், செய்யூர், உத்திரமேரூர் தாலுகாவில், 4,872 ஹெக்டேர் நிலப்பரப்பில், இலையுதிர் காப்புக்காடுகள் உள்ளன.சமூக காடுகள், 3,000 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளன.இதில் கோழியாளம், தீட்டாளம், பெருங்கோழி, காட்டுக்கூடலுார், காட்டுக்கரணை, தோட்டச்சேரி, கொளத்தனுார், எடமச்சி, ராமாபுரம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காப்புக்காடுகள் உள்ளன.இக்காடுகளில், 2,000க்கும் அதிகமான மான்கள், 1,000க்கும் அதிகமான மயில்கள், காட்டுப்பன்றி, முயல், நரி, குள்ளநரி, உடும்பு, குரங்கு போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன.மதுராந்தகம் வனச்சரக அலுவலகம், அச்சிறுபாக்கத்தில் செயல்பட்டு வருகிறது.அங்கு, பணி நிமித்தமாக செல்லும் பெண் வனக்காவலர்கள் தங்குவதற்காக, 2025 -- 26ல், 5.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக கட்டடம் கட்டப்பட்டு, பணிகள் முடிந்துள்ளன.இந்த கட்டடம் விரைவில் திறக்கப்பட்டு, பெண் வனக்காவலர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
22-May-2025