உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடை பூட்டை உடைத்து ரூ.15,000 திருட்டு

கடை பூட்டை உடைத்து ரூ.15,000 திருட்டு

மறைமலைநகர்:பொத்தேரியில், கடை பூட்டை உடைத்து, 15,000 ரூபாய் திருடிய மர்ம நபர்களை, மறைமலை நகர் போலீசார் தேடி வருகின்றனர். மறைமலை நகர் அடுத்த பொத்தேரி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மனைவி கீதா, 42. இவர், பொத்தேரி பிள்ளையார் கோவில் தெருவில், ஹெரிடேஜ் பால் ஷாப் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், கீதா வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு, வீட்டிற்குச் சென்றார். நேற்று அதிகாலை 3:30 மணியளவில் வந்து பார்த்த போது, மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து, கல்லாவில் இருந்த 15,000 ரூபாயை திருடிச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து கீதா அளித்த புகாரின்படி, மறைமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி