உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பச்சை சாய்பாபா கோவிலில் சீதா கல்யாணம் விமரிசை

பச்சை சாய்பாபா கோவிலில் சீதா கல்யாணம் விமரிசை

ஊரப்பாக்கம்:ராம நவமியை முன்னிட்டு, ஊரப்பாக்கத்தில் உள்ள பச்சை சாய்பாபா கோவிலில், சீதா கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.ஊரப்பாக்கம், வர்தமான் நகரில், பச்சை சாய்பாபா தரிசன மையம் உள்ளது. 2016ல், பூமி பூஜையுடன் துவங்கப்பட்ட கோவில் கட்டுமான பணி 2020ல் முடிக்கப்பட்டது. தொடர்ந்து 2021ல், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.தொடர்ந்து ஆண்டு தோறும், ராம நவமியை முன்னிட்டு, சீதா கல்யாணம் நடத்தப்படுகிறது.சீதா கல்யாண நிகழ்ச்சி, நேற்று காலை 8: 45 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, சீதா கல்யாணம் நடந்தது.ஆதம்பாக்கம், பிரேமிக வரதன் சத்சங்கத்தை சேர்ந்த காயத்திரி குழுவினர், நிகழ்ச்சியை நடத்தினர். இதில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி