பாரேரியில் பாம்பு உயிருடன் மீட்பு
மறைமலை நகர்,சிங்கபெருமாள் கோவில் அடுத்த, பாரேரி பகுதியில் அங்கன்வாடி மையம் எதிரில், ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை, ரேஷன் கடை அருகில் நல்லபாம்பு ஒன்று சுற்றி வருவதை பொது மக்கள் கண்டனர்.இதையடுத்து, மகேந்திரா சிட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து நல்ல பாம்பை உயிருடன் மீட்டு சிங்கபெருமாள் கோவில் வனப்பகுதியில் விட்டுச் சென்றனர்.