உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செல்வ முத்துக்குமார சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

செல்வ முத்துக்குமார சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

மறைமலை நகர்: மறைமலை நகர் செல்வ முத்துக்குமார சுவாமி கோவிலில் இன்று, கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. மறைமலை நகர் என்.ஹெச் -- 2 பகுதியில், பழமையான செல்வ முத்துக்குமார சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த 22ம் தேதி கந்த சஷ்டி பெருவிழா விமரிசையாக துவங்கியது. தினமும் மூலவர், வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளினார். நேற்று, 'மயில் மேல் கந்தன்' அலங்காரம் மற்றும் சந்தனக் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வள்ளி, தெய்வானை சமேதராய் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை முத்துக்குமார சுவாமி ஹோமம், சண்முக அலங்காரம் நடைபெற்ற உள்ளது. காலை 9:00 மணிக்கு ஏகதின லட்சார்ச்சனையும், மாலை 6:00 மணிக்கு மஹா சூரசம்ஹாரமும், சிவ பூஜையும் நடைபெற உள்ளது.நாளை மறுநாள், திருக்கல்யாண உத்சவம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ