உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பஸ் இயக்க ஆலோசனை

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பஸ் இயக்க ஆலோசனை

கிளாம்பாக்கம்:சித்ரா பவுர்ணமி தினமான வரும், 11ம் தேதியன்று, மதுரை உட்பட தென்மாவட்ட கோவில்கள் பலவற்றில் விழாக்கள் நடத்தப்படும்.இதற்காக ஆண்டுதோறும் சென்னையிலிருந்து, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தென் மாவட்டங்களுக்கு, அரசு பேருந்துகள் வாயிலாக பயணிப்பர்.அந்த வகையில், நடப்பாண்டு சித்ரா பவுர்ணமி தினம், வரும் 11ம் தேதி திங்கட்கிழமையில் வருகிறது.அதற்கு முந்தைய நாட்களான ஞாயிறு மற்றும் சனிக்கிழமை முதலே பயணியர் தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டு செல்வர்.எனவே, பொதுமக்கள் சென்னையிலிருந்து புறப்பட்டுச் செல்லவும், மீண்டும் சென்னைக்கு திரும்பவும், வழக்கமான எண்ணிக்கையில் இயக்கப்படும் பேருந்துகள் தவிர்த்து, கூடுதல் எண்ணிக்கையில் சிறப்பு பேருந்துகளை இயக்க, தமிழ அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி, தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தலைமையிலான ஆய்வுக் கூட்டம், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உள்ள கலந்தாய்வு அரங்கத்தில், நேற்று முன்தினம் நடந்தது.இக்கூட்டத்தில், எந்தெந்த ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும், எந்த எண்ணிக்கையில் இயக்க வேண்டும், பேருந்து முனையத்தில் உள்ள குறைபாடுகள் என்ன, என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.இதில், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய தலைமை நிர்வாக அதிகாரி பால் பிரின்சிலி, ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி