மேலும் செய்திகள்
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வினியோகம்
21-Nov-2024
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த ஆலத்துார் ஊராட்சியில், அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளியில், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.முகாமில், பொதுமக்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனையுடன், மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது. இதில், 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.மேலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில், ஊட்டச்சத்து உணவு மற்றும் உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
21-Nov-2024