தாம்பரம் மாநகராட்சியில் வரும் 28ல் சிறப்பு கூட்டம்
செங்கல்பட்டு:தாம்பரம் மாநகராட்சி வார்டுகளில், வரும் 28ம் தேதி சிறப்பு கூட்டம் நடக்கிறது. தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் அறிக்கை: தாம்பரம் மாநகராட்சியில், ஒன்று முதல் ஐந்து வரையிலான மண்டலங்களில், 70 வார்டு பகுதிகள் உள்ளன. இப்பகுதியில், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை சேவைகளை மேம்படுத்திட, அப்பகுதி மாநகராட்சி கவுன்சிலர்கள் தலைமையில், பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் பங்கேற்புடன், வரும் 28ம் தேதி, அந்தந்த வார்டுகளில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் பங்கேற்று, தங்களது வார்டுக்குட்பட்ட பகுதியில் குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலைகள், பூங்கா, மழைநீர் வடிகால் பராமரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை கூட்டத்தில் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.