மேலும் செய்திகள்
அய்யப்பன் கோவிலில் வருஷாபிஷேகம் விமரிசை
24-Nov-2024
கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகிலுள்ள மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவிலில், தர்ம சாஸ்தா அய்யப்பன் சன்னிதி உள்ளது.இங்கு நேற்று காலை 8:30 மணி முதல் விநாயகர் சிறப்பு பூஜையும், தர்ம சாஸ்தாவிற்கு 108 சங்குகளால் சங்காபிஷேகம் மற்றும் நெய் அபிஷேகம் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து, சந்தன காப்பு சகஸ்ரநாம அர்ச்சனையும், புஷ்பாஞ்சலியும், அதைத் தொடர்ந்து, அய்யப்பன் பஜனை பாடல்கள் பாடப்பட்டன.இதில், மாலை அணிந்த அய்யப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.
24-Nov-2024