உங்களுடன் ஸ்டாலின் சிறுதாமூரில் முகாம்
அச்சிறுபாக்கம்:சிறுதாமூர் ஊராட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம், நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியம், சிறுதாமூர் மற்றும் அனந்தமங்கலம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில்,'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம், சிறுதாமூர் ஊராட்சியில் நேற்று நடந்தது. மதுராந்தகம் வட்டாட்சியர் பாலாஜி, ஊராட்சி தலைவர் சரசு முன்னிலை வகித்தனர். இதில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை, கூட்டுறவு உள்ளிட்ட 15 துறைகள் வாயிலாக, 46 சேவைகள் வழங்கப்பட்டன. வீட்டுமனைப் பட்டா, மகளிர் உரிமைத்தொகை, தொகுப்பு வீடு, மின் இணைப்பு, ஆதார் அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, குடும்ப அட்டை என, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, துறை சார்ந்த அதிகாரிகளிடம் மக்கள் வழங்கினர். அந்த வகையில், நேற்று நடந்த முகாமில், 400-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. சிறப்பு முகாமில், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா பங்கேற்று, கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.