உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 121 இடங்களில் இன்று முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 121 இடங்களில் இன்று முகாம்

செங்கல்பட்டு,செங்கல்பட்டு மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாம், 121 இடங்களில் இன்று நடக்கிறது.இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' எனும் சிறப்புத் திட்டத்தின் கீழ், நகர்ப்புற பகுதிகளில் 106 முகாம்கள், ஊரக பகுதிகளில் 243 முகாம்கள் என, மொத்தம் 349 முகாம்கள் நடக்க உள்ளன.இதில் முதற்கட்டமாக இன்று, நகர்ப்புற பகுதிகளில் 52 முகாம்கள், ஊரக பகுதிகளில் 69 முகாம்கள் என, 121 முகாம்கள் நடக்கின்றன. இம்முகாம் இன்று துவங்கி, வரும் ஆக., 14ம் தேதி வரை நடக்கிறது. இதில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள, விடுபட்ட மகளிர் விண்ணப்பிக்கலாம்.முகாம்களுக்கு வரும் பொதுமக்களின் உடல் நலனை பாதுகாக்கும் வகையில், மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். இம்முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது, 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.முகாம்களின் தின வாரியான தகவல்களை, http;//chengalpattu.nic.inஎன்ற இணையதளத்தில் காணலாம். தங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பயன் பெறலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

முகாம் நடைபெறும் இடங்கள்

மேற்கு தாம்பரம் முத்துலிங்கம் தெரு,அம்பேத்கர் திருமண மண்டபம்புனிததோமையார் மலை மதுரப்பாக்கம் சமுதாயக்கூடம்மறைமலைநகர் மறைமலை நகர் நகராட்சி அலுவலகம்காட்டாங்கொளத்துார் மண்ணிவாக்கம் மகளிர் சுய உதவிக்குழு கட்டடம்திருப்போரூர் பொன்மார் சமுதாயக்கூடம்திருக்கழுக்குன்றம் நால்வர்கோவில்பேட்டை சமுதாயக்கூடம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை