மாநில ஜிம்னாஸ்டிக் போட்டி; சென்னை அணி சாம்பியன்
சென்னை: சென்னையில் நடந்த மாநில ஜிம்னாஸ்டிக் போட்டியில், சென்னை மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழ்நாடு அமெச்சூர் ஜிம்னாஸ்டிக் சங்கம் சார்பில், இருபாலருக்குமான மாநில ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் - 2025 போட்டி, வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த, 6 முதல் 19 வயது வரையி லான, 1,000க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். டேபிள் வால்ட், பேலன்ஸ் பீம், போடலல் பார், தரை உடற்பயிற்சி, ரிங் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இரண்டு நாட்கள் நடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சென்னை மாவட்ட வீரர் - வீராங்கனையர், அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். செங்கல்பட்டு, தர்மபுரி அணிகள் இரண்டாமிடத்தை பகிர்ந்து கொண்டன. தஞ்சாவூர் மாவட்ட அணி மூன்றா மிடத்தை பிடித்தது.