மாணவி கூட்டு பலாத்காரம் மேலும் இருவருக்கு காப்பு
திருப்போரூர்:தாம்பரம் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட 14 வயது மாணவி, ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். கடந்த 18ம் தேதி இரவு, மாணவி இயற்கை உபாதை கழிப்பதற்காக, ஒதுக்குப்புறமான இடத்திற்கு சென்றுள்ளார்.இதை நோட்டமிட்டு பின்தொடர்ந்து சென்ற சுந்தர், 22, மற்றும் 15 வயது சிறுவர்கள் இரண்டு பேர், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர். மாணவி கூச்சலிடவே, அக்கம்பக்கம் குடியிருப்பு வாசிகள் ஓடி வந்தனர்.பலாத்காரத்தில் ஈடுபட்ட மூன்று பேரும்அங்கிருந்து தப்ப முயன்றனர். அதில், சுந்தர் மட்டும்சிக்கினார்.அவர், தாழம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதில் பாதிக்கப்பட்ட மாணவி,தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இந்த வழக்கு, சிட்லபாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.சுந்தர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். போலீசாரின் தொடர் விசாரணையில், மற்ற இரண்டு சிறுவர்களையும் கைது செய்தனர்.