வடமாநில வாலிபர் திடீர் மரணம்
திருப்போரூர்:ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் கோவிந்ததேகம், 29. இவர், திருப்போரூர் அடுத்த காலவாக்கத்தில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.கடந்த 23ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வாலிபருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.அக்கம்பக்கத்தினர் காலவாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த திருப்போரூர் போலீசார், உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.