உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கண் அறுவை சிகிச்சைக்கு நவீன கருவிகள் வழங்கல்

கண் அறுவை சிகிச்சைக்கு நவீன கருவிகள் வழங்கல்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துமனை வளாகத்தில், கண் மருத்துவ பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது.அங்கு சிகிச்சைக்கு வரும் மக்கள், நீரிழிவால் ஏற்படும் விழித்திரை பாதிப்புகள் மற்றும் கண்நீர் அழுத்த நோயால் ஏற்படும் பாதிப்புகளுக்கான உயர் சிகிச்சைக்காக, சென்னை அரசு கண் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.இதை தவிர்க்க, தனியார் நிறுவனம் சமூக பொறுப்பு நிதியில், 28 லட்சம் ரூபாய் மதிப்பில், அதிநவீன உபகரணங்களான நீர் அழுத்த நோய் பார்வையிழப்பு கண்டறிதல் கருவி, நீரிழிவு கண் நோய் சிகிச்சைக்கான லேசர் கருவி மற்றும் பச்சிளம் விழித்திரை லேசர் சிகிச்சைக்கான கருவி ஆகிய உபகரணங்கள் வாங்கப்பட்ட்டன.அதன்பின், கண் சிகிச்சைக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, கண் மருத்துவ பிரிவு வளாகத்தில், மருத்துவமனை முதல்வர் ராஜஸ்ரீ தலைமையில் நேற்று நடந்தது.மருத்துவமனைக்கு தனியார் நிறுவனம் வழங்கிய கண் சிகிச்சைக்கான கருவிகளை, கலெக்டர் அருண்ராஜ் பயன்பாட்டிற்கு வழங்கினார்.அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் அரசு, துணை முதல்வர் அனிதா, கண்காணிப்பாளர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ