மாமல்லை பேரூராட்சியில் வரி வசூல் தீவிரம்
மாமல்லபுரம்:மாமல்லபுரம் பேரூராட்சிப் பகுதியில், இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்ட சொத்துவரி வசூலிக்கப்படுகிறது. சொத்துவரி, குடிநீர், தொழில் உரிமம் உள்ளிட்ட கட்டணங்களை, ஏராளமானோர் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர்.இதற்கிடையே, இந்த பேரூராட்சியுடன், அருகாமை ஊராட்சிப் பகுதிகளையும் இணைத்து, நகராட்சிப் பகுதியாக தரம் உயர்த்த, தமிழக அரசு ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இச்சூழலில், நகராட்சியானால், சொத்துவரி, பிற கட்டணங்கள் ஆகியவை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக, வரி, கட்டண நிலுவை தாரர்களிடம் கூறி, பேரூராட்சி ஊழியர்கள் தீவிரமாக வசூலிக்கின்றனர்.