உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பைக் விபத்து ஆசிரியர் பலி; மகன் படுகாயம்

பைக் விபத்து ஆசிரியர் பலி; மகன் படுகாயம்

வாலாஜாபாத், வாலாஜாபாத், அவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 38; அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி உமா, 32, மகன் சுபக் ஷன், 12.உடல்நலம் பாதிக்கப்பட்ட தன் மகனுக்கு, காஞ்சிபுரத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, 'ஹீரோ ஹோண்டா' பைக்கில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில், மகனுடன் வீடு திரும்பினார்.காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையில், வெண்குடி அருகே வந்தபோது காஞ்சிபுரம், வெள்ளக்குளத்தை சேர்ந்த கார்த்திக், 30, என்பவர் ஓட்டி வந்த, 'யூனிகார்ன்' பைக்குடன் மோதியது.இதில், தலையில் பலத்த காயமடைந்த சண்முகம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் சுபக் ஷன், எதிரில் வந்து மோதிய கார்த்திக் ஆகியோர் படுகாயம் அடைந்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ