தங்கமயில் புதிய கிளை செங்கல்பட்டில் திறப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், 'தங்கமயில்' நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா, நேற்று நடந்தது. மதுரையை தலைமையிடமாகக் கொண்ட 'தங்கமயில்' நிறுவனம், கடந்த 34 ஆண்டுகளாக, தங்க நகை விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தங்கமயில் ஜுவல்லரி, வாடிக்கையாளர்களுக்கு குறைந்த சேதாரத்தை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், 35 லட்சம் வாடிக்கையாளர்களுடன், தமிழகம் முழுதும் 66 கிளைகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா, செங்கல்பட்டில் நேற்று நடந்தது. இதில், தங்கமயில் ஜுவல்லரி ஷோரூமில் பிரத்யேக 'பிரைடல் ஸ்டோர்' அறிமுகம் செய்யப்பட்டு, அதில் 'தங்க மாங்கல்யம்' என்ற தனித்துவமான 'கலெக் ஷன்'கள் அறிமுகம் செய்யப்பட்டன.