உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ப்ரிஜ் வெடித்து சிதறி வீட்டு பொருட்கள் நாசம்

ப்ரிஜ் வெடித்து சிதறி வீட்டு பொருட்கள் நாசம்

பெரும்பாக்கம்:மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம், எழில் நகர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பு, 'எச் பிளாக்' 5வது தளத்தில் வசிப்பவர் குணசேகரன், 31. இவரது மனைவி சங்கரி, 30. தம்பதிக்கு பிரித்திகா, 9, லக்ஷயா, 2, என இரு குழந்தைகள்.நேற்று முன்தினம் மாலை, வீட்டில் மின்சாரம் தடைபட்டதால், குடும்பத்தினர் அனைவரும் வீட்டின் வெளியே அமர்ந்திருந்தனர்.பின், மின்சாரம் வந்தவுடன், பயங்கர சத்தத்துடன் ப்ரிஜ் வெடித்து, அறை முழுதும் தீ பற்றி எரிந்துள்ளது.அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. இதில் சோபா உட்பட 20,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், தீயில் எரிந்து நாசமாகின.குடியிருப்புவாசிகள் கூறியது:இங்கு, அடிக்கடி குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்தடை ஏற்படுகிறது. மின் வாரியத்திடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஏற்கனவே, பல வீடுகளில் இதுபோன்ற மின் விபத்துகள் நடந்துள்ளன.வீட்டில் குழந்தைகள் இருக்கும்போது, இப்படியான விபத்துகள் நடந்தால், பெரிய விபரீதம் ஏற்படும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை