மேலும் செய்திகள்
செங்கையில் இன்று குறைதீர் கூட்டம்
08-Nov-2024
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், கூட்டுறவு வார விழா, வரும் 14ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை நடக்கிறது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் நந்தகுமார் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில், அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, 71வது கூட்டுறவு வார விழா, வரும் 14ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.இவ்விழாவில், மாநில, மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு கேடயமும், சான்றிதழும் வழங்கும் தேர்வுமுறை, முதன்முறையாக இணையவழியில் நடைபெற உள்ளது.செங்கல்பட்டு மண்டலத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களும், தங்களது விபரங்களை, https://rcs.tn.gov.in-rcsweb எனும் இணையதத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.அதன் அடிப்படையில், தகுதிவாய்ந்த சங்கங்கள் மற்றும் விற்பனையாளர்கள், மாநில அளவில் பதிவாளர் மற்றும் மாவட்ட அளவில் மண்டல இணைப் பதிவாளர் ஆகியோர் தேர்வு செய்யப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
08-Nov-2024