உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அடுத்தடுத்து வீடு புகுந்து தாக்கி செயின் பறிப்பு

அடுத்தடுத்து வீடு புகுந்து தாக்கி செயின் பறிப்பு

மறைமலை நகர்:கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஏ.எல்.எஸ்., நகரை சேர்ந்தவர் மாரி, 50. இவர், தன் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார்.நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, இவரது வீட்டில் முகமூடி அணிந்து நுழைந்த மர்ம நபர், மாரி கழுத்தில் இருந்த 1 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு, காம்பவுன்ட் சுவர் மீது ஏறி குதித்து தப்பினார்.இதுகுறித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாரி தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற கூடுவாஞ்சேரி போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.இதே பகுதியில், நேற்று முன்தினம், செல்வி, 30, என்பவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், அவரை இரும்பு ராடால் தலையில் தாக்கியுள்ளனர். செல்வி கூச்சலிடவே மர்ம நபர் தப்பி ஓடி விட்டார்.அடுத்தடுத்து வீடு புகுந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதால், காயரம்பேடு கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.இரவு நேரங்களில், இந்த பகுதியில் போலீசார் ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி