சிங்கம் வீரா விடைபெற்றது
தாம்பரம்,:வண்டலுார் உயிரியல் பூங்காவில், கடந்த 2011ம் ஆண்டு, ராகவ் - கவிதா என்ற சிங்கங்களுக்கு பிறந்தது, வீரா என்ற ஆண் சிங்கம். இடுப்பு திசுக்கள் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட வீரா, கடந்த ஒரு மாதமாக எழ முடியாமல் தவித்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இறந்தது.