உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பதுக்கி வைத்து மது விற்றவர் கைது

பதுக்கி வைத்து மது விற்றவர் கைது

திருக்கழுக்குன்றம், திருக்கழுக்குன்றம் அடுத்த கிளாப்பாக்கம் காலனி பகுதியில், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், நேற்று காலை கள்ளத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்று வருவதாக, திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில், அப்பகுதிக்கு சென்ற போலீசார், கிளாப்பாக்கம் முழுதும் சோதனைசெய்தனர்.அப்போது, அதே பகுதியை சேர்ந்த முகேஷ், 25, என்பவர், வீட்டின் அருகில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், விற்பனைக்கு வைத்திருந்த, 27 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை