உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கந்தசுவாமி கோவிலில் நிறம் மாறிய குளத்து நீர்

கந்தசுவாமி கோவிலில் நிறம் மாறிய குளத்து நீர்

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கந்த பெருமான் சுயம்பு மூர்த்தியாகவும், மும்மூர்த்தி அம்சமாகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இந்த கோவிலை ஒட்டி, சரவண பொய்கை குளம் அமைந்துள்ளது. பக்தர்கள் இக்குளத்தில் நீராடி, கந்த பெருமானை வழிபட்டுச் செல்கின்றனர்.கடந்த 400 ஆண்டுகளாக வற்றாத நிலையில் உள்ள இந்த திருக்குளம், இப்பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாகவும் உள்ளது. இக்குளத்தில் மாசி மக தெப்பல் விழா, தைப்பூச தெப்ப விழாவும் நடைபெறுகிறது.இந்நிலையில், இக்கோவில் குளத்தின் நீர் வழக்கத்திற்கு மாறாக நிறம் மாறியுள்ளதாக பக்தர்கள், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.குளத்தில், படிக்கட்டில் உள்ள பாசியை அகற்ற வேண்டும். துணி துவைப்பது, கழிப்பிடமாக பயன்படுத்துவது போன்றவற்றை தடுக்க வேண்டும். கழிவுநீர் விடப்படுகிறதா என கண்காணித்து தடுக்க வேண்டும் எனவும், பக்தர்கள் வலயுறுத்தி உள்ளனர்.எனவே, குளத்தின் தண்ணீரை ஆய்வுக்கூடத்தில் சோதனையிட வேண்டும். துாய்மையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ