உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கரை ஒதுங்கிய ராட்சத குழாய்கள் கடலுக்குள் புதைக்கும் பணி நிறைவு

கரை ஒதுங்கிய ராட்சத குழாய்கள் கடலுக்குள் புதைக்கும் பணி நிறைவு

திருப்போரூர்:நெம்மேலி ஊராட்சியில் கரை ஒதுங்கிய குழாய்களை கடலுக்குள் புதைக்கும் பணி நிறைவடைந்தது.திருப்போரூர் அடுத்த நெம்மேலி ஊராட்சியில், 4276.44 கோடி ரூபாய் மதிப்பில் 85.50 ஏக்கர் பரப்பளவில் கடல் நீரை குடி நீராக்கும் 3வது ஆலையின் கட்டுமான பணி நடந்து வருகிறது. கடல்நீரை கொண்டு வருவதற்காக குழாய்கள் புதைக்கும் பணி நடந்து வந்தது.இந்நிலையில், கடந்த 1ம் தேதி கடல் அலை அதிகரிப்பு காரணமாக, கடலில் புதைக்கப்பட்டு வந்த 1.5 கி.மீ., நீளம் உள்ள குழாய்கள் திடீரென்று கரை ஒதுங்கின. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்லும் தொழில் பாதிக்கப்பட்டது.மேலும் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், மீனவர்கள் என 200க்கும் மேற்பட்டோர், 10 க்கும் மேற்பட்ட பொக்லைன் மற்றும் ராட்சத கிரேன் மூலம் கரை ஒதுங்கிய ராட்சத குழாய்களை கடலுக்குள் இழுத்து செல்லும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று நேற்று நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை