உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கன்னியம்மன் கோவிலில் தீமிதி விழா

கன்னியம்மன் கோவிலில் தீமிதி விழா

மணப்பாக்கம்:மணப்பாக்கம் கன்னியம்மன் கோவிலில், தீமிதி விழா நடந்தது. செங்கல்பட்டு அடுத்த, மணப்பாக்கம் கிராமத்தில், பாலாற்றங்கரையில் புகழ்பெற்ற கன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடித்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு ஆடித்திருவிழா, கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், ஜூலை மாதம் 17 ம் தேதி, துவங்கியது. ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமையையொட்டி, கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், நேற்று முன்தினம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு, கோவிலிலிருந்து அம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, ஊர்வலமாக சென்றார். பக்தர்கள் குண்டத்தில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !