உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீட்டின் பூட்டை உடைத்து பணம், மொபைல் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து பணம், மொபைல் திருட்டு

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், மண்ணிவாக்கம் ஊராட்சி கண்ணப்பர் மூன்றாவது தெருவில் வசித்து வருபவர் வாசுகி, 51, இவர், அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார்.இந்நிலையில், நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு, வேலைக்கு சென்றார். பின், வேலை முடிந்து வீடு திரும்பிய, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.தொடர்ந்து, அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த கொலுசு மற்றும் 4000 ரூபாய் திருடு போயிருந்தது.அதேபோல், அவரின் வீட்டின் அருகில் வசித்து வரும் அவரது மகள் பிரியாவின் வீட்டிலும் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த இரண்டு மொபைல் போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.இது குறித்து, ஓட்டேரி காவல் நிலையத்தில், வாசுகி புகார் தெரிவித்தார். போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை