உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீட்டு உரிமையாளரை தள்ளிவிட்டு நகை, பணத்துடன் தப்பிய திருடர்கள் கடமலைப்புத்துாரில் துணிகரம்

வீட்டு உரிமையாளரை தள்ளிவிட்டு நகை, பணத்துடன் தப்பிய திருடர்கள் கடமலைப்புத்துாரில் துணிகரம்

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் காவல் எல்லைக்கு உட்பட்ட கடமலைப்புத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தானம்,55.இவர் நேற்று முன்தினம், இவரது மகனின் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுக்க, குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார்.மீண்டும் சென்னையில் இருந்து, அவர் மட்டும் தனியாக, மாலை வீட்டுக்கு வந்துள்ளார்.அப்போது, வீட்டின் 'கேட்' உடைக்கப்பட்டு, கதவு திறந்திருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்ற போது, முகத்தை துணியால் மறைத்திருந்த மூன்று மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 3.5 லட்சம் ரூபாய், அரை கிலோ வெள்ளி பொருட்களை எடுத்துக்கொண்டு, சந்தானத்தை கீழே தள்ளி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து சந்தானம் அளித்த புகாரின்படி, அச்சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை