திருவள்ளூர் டிவிஷன் கிரிக்கெட் எபினேசர் சி.ஏ., அணி வெற்றி
சென்னை, திருவள்ளூர் கிரிக்கெட்டிவிஷன் லீக் போட்டியில், எபினேசர் சி.ஏ., அணி, மூன்று விக்கெட் வித்தியாசத்தில்,ஆட்டோலெக் அணியை தோற்கடித்தது.திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், திருவள்ளூர் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இரண்டாவது டிவிஷன் 'ஏ' பிரிவின் ஆட்டம், ஆவடிஓ.சி.எப்., மைதானத்தில் நடந்தது.போட்டியில் ஆட்டோலெக் அணி மற்றும் எபினேசர் சி.ஏ., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆட்டோலெக் அணி, முதலில் பேட்டிங் செய்து, 28.2 ஓவர்களில் 'ஆல் அவுட்' ஆகி, 103 ரன்களை அடித்தது.அடுத்து களமிறங்கிய எபினேசர் சி.ஏ., அணி, 26.1 ஓவர்களில், ஏழு விக்கெட் இழப்புக்கு, 108 ரன்களை அடித்து, மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.அட்டோலெக் அணியின் வீரர் விஷால் ஐந்து விக்கெட் எடுத்து, 29 ரன்களை கொடுத்தார்.இதே பிரிவில், 'பி' மண்டல போட்டியில், ஸ்ரீ வைஷ்ணவி சி.சி., மற்றும் திருவள்ளூர் சி.சி., அணிகள் பலப்பரீட்சை நடத்தின.முதலில் விளையாடிய ஸ்ரீ வைஷ்ணவி அணி, 28.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 122 ரன்களை அடித்தது.திருவள்ளூர் சி.சி., வீரர் ஈஸ்வர், ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.அடுத்து களமிறங்கிய திருவள்ளூர் சி.சி., அணி, 25.5 ஓவர்களில் 'ஆல் அவுட்' ஆகி, 79 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.