மேலும் செய்திகள்
6,500 கிலோ குட்கா பறிமுதல் மூவர் கைது
07-Jan-2025
பூந்தமல்லி : சென்னை - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நசரத்பேட்டையில் தனிப்படை போலீசார் வாகன சோதனை நடத்தினர்.அவ்வழியே வந்த கார், கன்டெய்னர் லாரியில் சோதனை செய்த போது, குட்கா புகையிலை பொருட்கள், 6,500 கிலோ இருந்தது. அதன் மதிப்பு 10 லட்சம் ரூபாய்.அதை பறிமுதல் செய்த நசரத்பேட்டை போலீசார், அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த கனகலிங்கம், 38, குமார், 34, விக்னேஷ், 27, ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
07-Jan-2025