உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / லாட்டரி விற்ற மூவர் சிக்கினர்

லாட்டரி விற்ற மூவர் சிக்கினர்

செங்கல்பட்டு,:செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, செங்கல்பட்டின் முக்கிய பகுதிகளில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த மூவரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.இவர்கள் மூவரும் செங்கல்பட்டு, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார்,55, அனுமந்தபுத்தேரி பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி,47, மற்றும் உத்திரமேரூரைச் சேர்ந்த பாஸ்கரன், 57, என, தெரிந்தது. இதையடுத்து, மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை