உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஓட்டேரியில் லாட்டரி விற்பனை தாய், மகன் உட்பட மூவர் கைது

ஓட்டேரியில் லாட்டரி விற்பனை தாய், மகன் உட்பட மூவர் கைது

ஓட்டேரி, தலைமைச் செயலக காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நம்மாழ்வார்பேட்டையில், வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பது அதிகரித்தது.இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், நம்மாழ்வார்பேட்டையில் உள்ள பாஸ்ட்புட் கடை மற்றும் ஆட்டோ ஸ்டாண்ட்டில், தீவிரமாக கண்காணித்தனர்.அப்போது, லாட்டரி சீட்டு எண்களை துண்டு காகிதத்தில் எழுதி விற்ற கும்பலை மடக்கிப் பிடித்தனர். இதுதொடர்பாக, கோடம்பாக்கத்தை சேர்ந்த முகேஷ் நடராஜ், 29, வினோத், 21, மற்றும் அவரது தாய் சசிகலா, 39, ஆகிய மூவரை கைது செய்தனர்.இவர்களிடமிருந்து, மூன்று மொபைல் போன்கள், 1,900 ரூபாய், மொபைல் பிரின்டர் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட சசிகலா மற்றும் வினோத் மீது, ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைது செய்யப்பட்ட மூவரும், நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி