உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் தபால் நிலையத்தில் இட நெருக்கடியால் திணறல்

திருப்போரூர் தபால் நிலையத்தில் இட நெருக்கடியால் திணறல்

திருப்போரூர், திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மேற்கு உள் மாடவீதியில், துணை தபால் நிலையம் செயல்படுகிறது. இந்த தபால் நிலையம், சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சேவை வழங்கி வருகிறது. நெருக்கடியான இடத்தில் செயல்படும் இந்த அலுவலகத்தில், பொதுமக்கள் நிற்பதற்கு கூட இடமில்லை.பணம் செலுத்துதல், எடுத்தல், புதிய கணக்கு துவங்குதல், தபால் அனுப்புதல் என, பல தேவைக்கு வருவோர், இதனால் சிரமப்படுகின்றனர்.தபால் நிலையத்திற்கு வருவோர், இட நெருக்கடி காரணமாக திரும்பிச் சென்று, மீண்டும் கூட்டம் குறைந்ததும் வரவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால், வயதானோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுகின்றனர்.எனவே, மக்கள் நலன் கருதி, விசாலமான கட்டடத்தில் தபால் நிலைய அலுவலகம் செயல்பட, தபால் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை