உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நோயாளியின் உதவியாளருக்கு டோக்கன் செங்கை அரசு மருத்துவமனையில் அமல்

நோயாளியின் உதவியாளருக்கு டோக்கன் செங்கை அரசு மருத்துவமனையில் அமல்

செங்கல்பட்டு,:செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், நோயாளிகள் உதவியாளர்களுக்கு கையில்,'டோக்கன்' கட்டும் நடைமுறை, நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது.செங்கல்பட்டில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவாண்ணமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து புறநோயாளிகள், உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு, தினமும் புறநோயாளிகள் 3,000க்கும் மேற்பட்டவர்களும், உள் நோயாளிகள் 1,700க்கும் மேற்பட்வர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனை வார்டுகளில் சமூக விரோத கும்பலால், திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறமால் இருக்க, உள்நோயாளிகள் உடன் இருப்பவர்களுக்கு, கையில் 'டோக்கன்' கட்டிக் கொள்ளவும், பார்வையாளர்கள் இரண்டு பேருக்கு, அடையாள அட்டை வழங்கவும், மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.மேலும், மருத்துவமனை வளாகத்தில், டோக்கன் வழங்குவதற்கு தனி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.இதைத்தொடர்ந்து, அவரச சிகிச்சை பிரிவில் உள்நோயாளிகளின் உதவியாளருக்கு, கையில் டோக்கன் கட்டும் நடைமுறையை, மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லுாரி முதல்வர் சிவசங்கரன், நேற்று துவக்கி வைத்தார். துணை முதல்வர் அனிதா, கண்காணிப்பாளர் ஜோதிக்குமார், அறுவை சிகிச்சை பிரிவு துறைத் தலைவர் அரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி