உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  முட்டுக்காடு படகு குழாமில் சுற்றுலா பயணியர் குதுாகலம்

 முட்டுக்காடு படகு குழாமில் சுற்றுலா பயணியர் குதுாகலம்

திருப்போரூர்: முட்டுக்காடு படகு குழாமில் நேற்று, சுற்றுலா பயணியர் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். திருப்போரூர் ஒன்றியம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடில், நீர் விளையாட்டு மையமாக படகு குழாம் உள்ளது. இந்த படகு குழாம், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தால், 1984 முதல் இயக்கப்படுகிறது. இந்த படகு குழாம் உள்ள பகுதியில் ஆழம் 3 அடி முதல், 6 அடி வரை உள்ளது. துடுப்பு படகு, இயந்திர படகு, விரைவு படகு, 'வாட்டர் ஸ்கூட்டர்' வகை படகுகள் என, 46 படகுகள் இங்கு இயக்கப்படுகின்றன. வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறை நாட்களில், இங்கு பொழுதுபோக்குவதற்காக ஏராளமான சுற்றுலா பயணியர் வருவர். அந்த வகையில், நேற்று வார விடுமுறையையொட்டி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சுற்றுலா பயணியர் வந்து, தங்களின் விருப்பத்திற்கேற்ப, பல்வேறு விதமான படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி