உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் பாரம்பரிய உணவு திருவிழா

செங்கையில் பாரம்பரிய உணவு திருவிழா

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணியர், பாலுாட்டும் தாய்மார்கள், மற்றும் முதியோர், ஊட்டச்சத்து மற்றும் விழிப்புணர்வு இல்லாததால், பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக ரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் வாயிலாக, ரத்தசோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரசாரம் மற்றும் சிறுதானியம், பாரம்பரிய உணவு திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன.தொடர்ந்து, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா போட்டிகள், நேற்று நடந்தன.மகளிர் திட்ட இயக்குனர் லோகநாயகி, முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா, வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட் ஆகியோர் பங்கேற்றனர்.இதில், 20 சுய உதவிக்குழுக்கள் பங்கேற்று, சிறுதானியங்கள், கீரை வகைகள், காய்கறிகள், பழங்களை கொண்டே சரிவிகித உணவை பெறுவது குறித்து விழிப்புணர்வுவை ஏற்படுத்தும் வகையில், சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவுகளை காட்சிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை