இ.சி.ஆரில் நாளை போக்குவரத்து மாற்றம்
கானத்துார்:தாம்பரம் கமிஷனரகம் சார்பில், நாளை காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை, இ.சி.ஆர்., உத்தண்டியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. இதனால், இ.சி.ஆரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.அதன்படி, திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள், அக்கரை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, ஓ.எம்.ஆரில் சோழிங்கநல்லுார், கேளம்பாக்கம், கோவளம் வழியாக செல்ல வேண்டும்.அதேபோல், கோவளத்தில் இருந்து திருவான்மியூர் நோக்கி செல்லும் வாகனங்கள், கோவளம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, கேளம்பாக்கம் வழியாக, ஓ.எம்.ஆரில் சோழிங்கநல்லுாரில் வலதுபுறம் திரும்பி, அக்கரை சந்திப்பை அடைந்து, இடதுபுறம் திரும்பி செல்ல வேண்டும்.