மேலும் செய்திகள்
செங்கையில் புதிய கலெக்டர் பொறுப்பேற்பு
26-Jun-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதியிலுள்ள, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி நடந்தது.செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தம், செய்யூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.இந்த தொகுதிகளுக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி நடத்த, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஏழு சட்டசபை தொகுதியிலுள்ள ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு, கலெக்டர் சினேகா நேற்று முன்தினம் பயிற்சியை துவக்கி வைத்தார்.இதில், செங்கல்பட்டு சப் - கலெக்டர் மாலதி ஹெலன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் காஜா சாகுல் அமீது, தேர்தல் பிரிவு தாசில்தார் சிவசங்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
26-Jun-2025