உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மலையடி வேண்பாக்கத்தில் மரக்கன்று நடவு துவக்கம்

மலையடி வேண்பாக்கத்தில் மரக்கன்று நடவு துவக்கம்

செங்கல்பட்டு: மலையடி வேண்பாக்கத்தில் நேற்று, மரக்கன்று நடும் விழா நடந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில், எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் நாற்றங்கால் பண்ணைகளை அமைத்து, மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, நடவு பணிகள் நடந்து வருகின்றன. சாலையோரம் மற்றும் பிற பகுதிகளில் என, 61,000 மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டது. இதில், மாவட்டம் முழுதும் 57,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சியில், மலையடி வேண்பாக்கம் கிராமம் உள்ளது. இங்குள்ள ஏரிக்கரையில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில், மரக்கன்று நடும் விழா, கலெக்டர் சினேகா தலைமையில், நேற்று நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் நந்திமதி திருமலை முன்னிலை வகித்தார். இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பசன், மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, மாவட்ட ஊரக வளர்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், காமாட்சி, வனக்குழு தலைவர் திருமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை