உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய மரம் அகற்றம்

வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய மரம் அகற்றம்

சித்தாமூர், சித்தாமூர் அடுத்த பெரியகளக்காடி கிராமத்தில், போந்துார் - அச்சிறுபாக்கம் செல்லும் பிரதான சாலை உள்ளது.மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலையை போந்துார், பெரியகளக்காடி, முத்துவிநாயகபுரம், கயப்பாக்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.இருசக்கர வாகனம், கார், லாரி என, தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் செல்கின்றன.பெரியகளக்காடி- - போந்துார் கூட்ரோடு இடையே சாலை ஓரத்தில், பழமையான காட்டு வாகை மரம் பட்டுப்போய் இருந்ததால், பருவமழை காரணத்தால் பலத்த காற்று வீசும் போது, மரம் முறிந்து வாகன ஓட்டிகள் மீது விழும் அபாயம் நிலவியது.இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாநில நெடுஞ்சாலைத்துறையினர்,'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக, பட்டுப்போய் இருந்த மரத்தை வேரோடு அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை