நந்திவரத்தில் அகற்றப்படாத பேனர்களால் அவதி
கூடுவாஞ்சேரி:நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி , நந்திவரத்தில் அரசியல் கட்சியினர்போட்டி போட்டு கொண்டு பேனர் வைத்துள்ளனர். பிறந்த நாள் மற்றும் திருமண நாள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்பாக சாலையை ஆக்கிரமித்து பேனர்கள் வைக்கின்றனர்.மேலும் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தும். அந்த பேனர்களை அகற்றாமல் வைத்துள்ளதால்,அது சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட , பல்வேறு பகுதிகளில் பிறந்தநாள்,திருமணநாள், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு சாலையை ஆக்கிரமித்து, பேனர்கள் வைத்து வருகின்றனர் . பேனர்கள் வைக்க தடை விதித்து , நீதிமன்றமும் தமிழக அரசும் உத்தரவிட்டுள்ள நிலையில். அதை பின்பற்றாமல் அரசியல் கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர்.மேலும் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது, பல நாட்கள் ஆகியும் அகற்றப்படாத பேனர்களை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது .எனவேஅனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பேனர்களைஅகற்றுவதோடு , பேனர் வைப்பவர்கள் மீது, அபராதம் விதித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.