உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீடு புகுந்து திருட முயன்ற இருவர் கைது

வீடு புகுந்து திருட முயன்ற இருவர் கைது

தாம்பரம்:சிட்லப்பாக்கத்தில், இரவு நேரத்தில் ஆயுதங்களுடன் வீடு புகுந்து திருட முயன்ற இருவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.தாம்பரம் அருகே சிட்லப்பாக்கம், சூர்யா அவன்யூ பகுதியில் வசிக்கும் பிரபாகரன் என்பவரது வீட்டில், அவரது மனைவி சரண்யா, மூன்று மாத கைக்குழந்தையுடன், இரண்டு தினங்களுக்கு முன், இரவு தனியாக இருந்த போது, மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் பூட்டை உடைத்து திருட முயன்றனர்.சரண்யா கூச்சலிட்டதையடுத்து, அந்த நபர்கள் தப்பினர். இந்த சம்பவம் குறித்து, சிட்லப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து விசாரித்தனர்.இதில், கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டது, குன்றத்துார் அருகே பரணிபுத்துார் பகுதியை சேர்ந்த முரளி, 29, ஸ்ரீதர், 38, என்பது தெரிய வந்தது.இவர்கள், வாடகை கார் எடுத்து, ஆட்கள் இல்லாத வீடுகளை பகலில் நோட்டமிட்டு, இரவு நேரத்தில் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை