உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுக்கூடத்தில் முதியவரை தாக்கியதை தட்டிக்கேட்ட வாலிபருக்கு கத்திக்குத்து இரண்டு பேர் கைது

மதுக்கூடத்தில் முதியவரை தாக்கியதை தட்டிக்கேட்ட வாலிபருக்கு கத்திக்குத்து இரண்டு பேர் கைது

பெருங்களத்துார்:மதுக்கூடத்தில், முதியவரை தாக்கிய போதை ஆசாமிகளை தட்டிக்கேட்ட நபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். புது பெருங்களத்துார், டேவிட் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ், 37. இவர், தி.நகரில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வருகிறார். பெருங்களத்துார், சித்ரா 'டாஸ்மாக்' கடை மதுக்கூடத்தில், நேற்று முன்தினம் மாலை மது அருந்தினார். அருகே முதியவர் ஒருவர் மது அருந்தியுள்ளார். இவர்களுக்கு அருகே, மது அருந்திய வண்டலுார், காந்தி நகரைச் சேர்ந்த நவீன், 28, புது பெருங்களத்துார், புத்தர் தெருவைச் சேர்ந்த ஜான்சன், 23, ஆகிய இருவர், போதை தலைக்கேறியதும், முதியவரை கேலி கிண்டல் செய்து, முகத்தில் தாக்கியுள்ளனர். இதை, பிரகாஷ் தட்டிக்கேட்டுள்ளார். இதில் இருதரப்பினர் ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். அங்கிருந்தோர் அவர்களை சமாதானப்படுத்தி உள்ளனர். ஆனால், மதுக்கூடத்திற்கு வெளியே, மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், நவீன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால், பிரகாஷின் இடது தோள்பட்டையில் வெட்டி, முதுகில் குத்திவிட்டு, ஜான்சனுடன் அங்கிருந்து தப்பினார். காயமடைந்த பிரகாஷ், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து விசாரித்த பீர்க்கன்காரணை போலீசார், நவீன், ஜான்சன் ஆகியோரை, நேற்று கைது செய்தனர். நவீன் மீது, மதுரவாயல், ஓட்டேரி காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை