உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இருசக்கர வாகனங்கள் திருடிய இருவர் கைது

இருசக்கர வாகனங்கள் திருடிய இருவர் கைது

மேல்மருவத்துார்:மதுராந்தகம் அடுத்த பெரிய வெண்மணி கிராமம், செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ், 42.இவர் நேற்று முன்தினம், மேல்மருவத்துார் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு, சித்தாமூர் நோக்கி வந்துள்ளார்.அப்போது, மேல்மருவத்துார் போலீசார் இவரை மடக்கி சோதித்த போது, அது திருடப்பட்ட இருசக்கர வாகனம் என தெரிந்தது.இது குறித்து மேலும் விசாரித்ததில் மதுராந்தகம், அச்சிறுபாக்கம், ராமாபுரம், மேல்மருவத்துார் சுற்றுவட்டார பகுதிகளில், இவர் இருசக்கர வாகனங்கள் திருடியது தெரிந்தது.திருடிய வாகனங்களை, சித்தாமூர் ஒன்றியம், கொளத்துார் அடுத்த பையம்பாடி கிராமத்தைச் சேர்ந்த திருமலை, 26, என்ற, பைக் மெக்கானிக்கிடம் விற்றது தெரிந்தது. மெக்கானிக் திருமலையை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.பின், வழக்கு பதிவு செய்து ராஜேஷ், திருமலையை, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை