உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இரு வீடுகளில் புகுந்து நகை, பணம் திருட்டு

இரு வீடுகளில் புகுந்து நகை, பணம் திருட்டு

செம்மஞ்சேரி, செம்மஞ்சேரி, சுனாமி நகரைச் சேர்ந்தவர் விஜயா, 58. இவர், வெளியூர் சென்று, நேற்று வீட்டுக்குத் திரும்பினார்.அப்போது, இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, ஒரு சவரன் நகையும், 5,000 ரூபாயும் திருடப்பட்டிருந்தது.இதே பகுதியைச் சேர்ந்தவர் யோவான், 30. இவர், வேலை நிமித்தமாக, இரண்டு நாள் வெளியூர் சென்று, நேற்று வீடு திரும்பினார்.இவரின் வீட்டிலும், பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், 18,000 ரூபாயை திருடிச் சென்றுள்ளார்.இதுகுறித்து, இருவரும் அளித்த புகாரின்படி, செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ