உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விஷம் வைத்து தெரு நாய்கள் கொலை இருவர் நீதிமன்ற ஜாமினில் விடுவிப்பு

விஷம் வைத்து தெரு நாய்கள் கொலை இருவர் நீதிமன்ற ஜாமினில் விடுவிப்பு

பெருங்களத்துார்: புதுபெருங்களத்துாரில், குழந்தைகளை கடிக்க பாய்ந்ததால், தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற இருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். புதுபெருங்களத்துார், சீனிவாசா நகர், முத்தமிழ் தெருவை சேர்ந்தவர் தீபா, 30. வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். அதோடு, இரண்டு தெரு நாய்களையும் வளர்த்து வந்தார். அதே தெருவை சேர்ந்தவர் ஜெகன்குமார். தீபா வளர்க்கும் தெரு நாய்கள், ஜெகன்குமாரின் குழந்தைகளை கடிக்க பாய்ந்து வந்ததாகவும், தெருவில் செல்வோரை விரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெகன்குமார், இரண்டு நாட்களுக்கு முன், எறும்பு மருந்து கலந்த உணவை, அந்த நாய்களுக்கு வைத்துள்ளார். அவற்றை சாப்பிட்ட நாய்களுக்கு, மறுநாள் காலை வாயில் இருந்து நுரை தள்ளியது. கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், நாய்கள் விஷம் கலந்த உணவை சாப்பிட்டது தெரியவந்தது. பின், சிகிச்சை பலனின்றி அந்த நாய்கள் இறந்தன. கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவை அடக்கம் செய்யப்பட் டன. பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில், தீபா புகார் அளித்தார். இப்புகாரின்படி போலீ சார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், அதே தெருவை சேர்ந்த ஜெகன்குமார், 33, வினோத், 34, ஆகிய இருவர் சேர்ந்து, விஷம் கலந்த உணவை வைத்து, இரண்டு நாய்களை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தினர். அங்கு, இருவரும் நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை