உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டூ - வீலர் மீது பஸ் மோதி வண்டலுாரில் வாலிபர் பலி

டூ - வீலர் மீது பஸ் மோதி வண்டலுாரில் வாலிபர் பலி

கூடுவாஞ்சேரி:மயிலாடுதுறையை சேர்ந்தவர் முத்து, 24. இவர், சென்னை ராமாபுரத்தில் தங்கி, தனியார் நிறுவனத்தில் மருந்து பொருட்கள் வினியோகம் செய்யும் பணி செய்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அலுவலகம் தொடர்பாக, டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., இருசக்கர வாகனத்தில், வண்டலுார் சிக்னல் அருகில் வந்து கொண்டிருந்த போது, அவருக்கு பின்னால் கோயம்பேட்டில் இருந்து தென்காசியை நோக்கி, தனியார் ஆம்னி பேருந்து வந்து கொண்டிருந்தது.பேருந்தை தென்காசி மாவட்டம், சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த சுப்புராஜ், 28, என்பவர் இயக்கி வந்தார். பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.அந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் இருந்த முத்து, நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது, முத்துவின் தலை மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.புகாரின்ஆஈ, கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, முத்துவின் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநர் சுப்புராஜை, கிளாம்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை